search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடைக்கு சீல்"

    • புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
    • புகையிலை விற்ற கடைக்கு சீல் வைத்தனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் கடைவீதியில் உணவு பாதுகாப்பு அலுவலர் கர்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம், சப்-இன்ஸ் பெக்டர்கள் சந்தோஷ், ஹரி மற்றும் அலுவலர்கள் கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

    அப்போது மேலராஜ வீதியில் சண்முகம் என்பவரின் பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.

    அதைதொடர்ந்து புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.

    இதையடுத்து நீடாமங்கலம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ரிகள் எச்சரித்தனர் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

    • 25 கிலோ சிக்கியது
    • ரூ.1900 அபராதம் விதித்தனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் உத்தரவின் படி ஜோலார்பேட்டை நகராட்சி ஆணையாளர் பழனி தலைமையில் ஜோலார்பேட்டை நகராட்சி பல்வேறு பகுதிகளில் உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் யாராவது பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்கிறார்களா என அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது புது ஓட்டல் தெருவில் உள்ள கடையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் சுமார் 25 கிலோ இருப்பது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்து கடையின் உரிமையாளருக்கு ரூ.1900 அபராதம் விதித்தனர்.

    மீண்டும் பிளாஸ்டிக் விற்பனை செய்தது தெரியவந்ததால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என அதிகாரிள் எச்சரிக்கை விடுத்தனர்.

    • கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து கிடந்தது
    • தடை செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார்.

    கோத்தகிரி

    கோத்தகிரி பழைய உழவர் சந்தைக்கு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடையில் குன்னூர் ஆர்டிஓ பூசனக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கடையில் குப்பைகள் ஆங்காங்கே குவிந்து சுகாதாரமற்ற முறையில் கிடந்தது. மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட மெழுகு பூசப்பட்ட டம்ளர்கள் பயன்படுத்த வந்ததும் தெரியப்பட்டது. இதனை அடுத்து அந்த கடைக்கு ஆர்டிஓ சீல் வைக்க உத்தரவிட்டார். மேலும் கடையை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் டம்ளர் பயன்படுத்த தடையும் விதித்தார். தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று டாஸ்மார்க் ஊழியர்களுக்கு அறிவுரையும் வழங்கினார்.

    • தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது.
    • உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் வந்த அதிகாரிகள் ரகமதுல்லாவின் கடைக்கு சீல் வைத்தனர்.

    போரூர்:

    வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே கடை நடத்தி வருபவர் ரகமதுல்லா. இவர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும் அவர் தொடர்ந்து குட்கா, புகையிலை விற்று வந்ததாக தெரிகிறது. இதையடுத்து வடபழனி உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்த்பாபு ஆகியோர் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ரகமதுல்லா கடையின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு கடிதம் அனுப்பினர். இதைத்தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சதாசிவம் தலைமையில் வந்த அதிகாரிகள் ரகமதுல்லாவின் கடைக்கு சீல் வைத்தனர்.

    • கெல்வின் (வயது37) ‌‌என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
    • ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் வடலூர் இன்ஸ்பெக்டர் வீரமணி தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆபத்தாரணபுரம் பகுதியில் கெல்வின் (வயது37) ‌‌என்பவர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இதனையொட்டி அவர்கடையிலிருந்து ரூ.5,50 00மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து செய்தனர். இதே போல் ராகவேந்திரா சிட்டியில் சபியுல்லா பெட்டி க்கடையில் ரூ.1500, மதிப்பிலான, புகையிலை பொரு ட்களை பறிமுதல் செய்தனர்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வருவாய்த்துறையினர் 2 கடைகளுக்கும் சீல் வைத்தனர்.

    • அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முத்தாண்டி குப்பம் கடை வீதி பகுதியில் அரசு தடை விதித்துள்ள புகையிலைபொருள்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காடா ம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரை பாண்டியன் தலைமையில் சப்-–இன்ஸ்பெக்டர் வெங்க டேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் முத்தாண்டி க்குப்பம் புதுகுளம்தெரு சின்ராசு (வயது34) என்பவரது கடையில்இ ருந்துமூட்டை,மூட்டையாக ஹான்ஸ் பாக்கெ ட்டுகள் அடுக்கி வைக்கப்ப ட்டிருந்தது. அதனை தொடர்ந்து 130 கிலோ ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து முத்தாண்டி க்குப்பம்போலீசார் வழக்கு பதிவு செய்து சின்ராசுவை கைது செய்தனர். புகையிலை பொருட்கள்எப்படி கிடைத்தது? யார் யாருக்கு விற்பனை செய்துள்ளார்? என்பது குறித்து கிடுக்கிப் பிடி விசாரணை நடத்திநீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின்னர் வருவா ய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. 

    • அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் அருகே பூதாமூர் பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருபவர் ஜெயபாண்டியன். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என போலீசருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற விருத்தாசலம் காவல்துறையினர் சோதனை செய்ததில் அவரது மாருதி ஆம்னி வாகனத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து பூதாமூர் கிராம நிர்வாக அலுவலர் அசோக் தலைமையிலான வருவாய்த்துறையினர், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயபாண்டியணின் கடைக்கு சீல் வைத்தனர். சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஒரு கிலோ போதை பொருட்கள் பறிமுதல்
    • வாலிபர் கைது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் டவுன் புதிய ‌பஸ் நிலையம் அருகே உள்ள கடையில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டுக்கு கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு தனி‌பிரிவு போலீசார் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கடையில் இருந்து ஒரு கிலோ போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

    இதனை ஒட்டி போலீசார் கடைக்கு சீல் வைத்து வியாபாரியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற பொருட்கள் யாராவது விற்பனை செய்வது குறித்து தெரிய வந்தால் உடனடியாக அவர்கள் பற்றி விவரத்தை அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் அல்லது போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் செல்போன் 944299296 வாட்ஸ் ஆப் மூலம் தெரியப்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

    • விருத்தாசத்தில் குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

    கடலூர்:

    விருத்தாசலம் பங்களா தெரு பகுதியில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார்.தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பகுதியில் அப்துல் மாலிக் என்பவர் தனது கடையில் ரூ.5 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததை கண்டனர்.

    தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிந்து அப்துல் மாலிக்கை கைது செய்தனர். விசாரணையில் இவர் ஏற்கனவே குட்கா விற்பனையில் கைது செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கபட்டது. குட்கா விற்பனையில் 2-வது முறையாக கைது செய்யப்பட்டதால், அவரது கடைக்கு வருவாய் துறை அதிகாரிகள் சீல்வைத்தனர்.

    • 30 போதை பாக்கெட்டுகள் பறிமுதல்
    • வியாபாரி கைது

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி சப் இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நாட்டறம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி ராஜவீதி பகுதியில் உள்ள மளிகை கடை ஒன்றில் சோதனை செய்தபோது அரசு தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் (ஹான்ஸ் பாக்கெட்டுகள்) விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து 30 குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் குட்கா விற்ற மளிகை கடைக்கு தாசில்தார் பூங்கொடி முன்னிலையில் வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

    • போதை பாக்கு விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
    • அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ் பாக்கெட், கூல்லிப் பாக்குகள் விற்றது தெரியவந்தது.

    விழுப்புரம்:

    விக்கிரவாண்டி அருகே தாசில்தார் நடத்திய திடீர் ஆய்வில் போதை பாக்கு– கள் விற்ற கடைக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தார்.  விக்கிரவாண்டி தாலுகா சிந்தாமணியின் சர்வீஸ் சாலையில் உள்ள முருகன் (வயது 47) என்பவரது கடை யில் தாசில்தார் இளவரசன் தலைமையில், விழுப்புரம் தாலுகா இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சிறப்பு சப்-–இன்ஸ்பெக்டர் பிரபாகரன், வி.ஏ.ஓ. சண்முகவேலன், உதவியாளர் மகாலட்சுமி ஆகியோர் கொண்ட குழுவி னர் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது அரசால் தடை செய்ய ப்பட்ட ஹான்ஸ் பாக்கெட், கூல்லிப் பாக்கு–கள் விற்றது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, முருகனை கைதுசெய்தனர். போதை பாக்குகளை பறிமுதல் செய்து, தாசில்தார் இளவர சன் கடையை பூட்டி சீல்வைத்தார். 

    • விழுப்புரம் அருகே குட்கா, பான் மசாலா விற்ற கடைக்கு வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர்.
    • தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் குட்கா, பான் மசாலா போன்ற புகையிலைப் பொருட்களை ஒழிப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.

    இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் போலீசார் மூலம் எடுக்கப்பட்டு இதனை செய்பவர் மீது கடுமையாக தண்டிக்கப்படுபவர் எனவும் தெரிவித்தார்.இதன் மூலம் இந்த புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வோறை முழுமையாக தடுக்க விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தனிப்படை அமைத்து தீவிர சோதனை வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில் விழுப்புரத்தில் இருந்து செஞ்சி சாலையில் உள்ள அப்பம்பட்டு பகுதியில் மளிகை கடை ஒன்று உள்ளது. அந்த கடையை அதே பகுதியை சேர்ந்த ராமு என்பவர் நடத்தி வருகிறார். அந்த கடையில் அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்கா போன்ற புைகயிலைப் பொருட்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    தகவல் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடையில் சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பது உறுதியானது. உடனே செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து ராமுவை கைது செய்தனர். மேலும் வருவாய்த் துறையினர் முன்னிலையில் போலீசார் கடைக்கு சீல் வைத்தனர் தடை செய்யபட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    ×